சினிமா செய்திகள்பிக் பாஸ்-6 வீடு ரெடி, வீரர்களும் ரெடி, வேட்டையாட நீங்க ரெடியா? அனல் பறக்கும் வீடியோ.
அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 களை கட்ட தொடங்கி இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே இந்த நிகழ்ச்சியை பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருந்தது. அதிலும் ஒவ்வொரு நாளும் வெளியாகும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது.
அதில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான வீடு எப்படி இருக்கும் என்ற ஒரு புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஆண்டவர் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரவாரமான பின்னணி இசையுடன், அட்டகாசமாக நுழைகிறார். ஆனால் வீட்டின் உள்ளமைப்பு எதுவும் காட்டாமல் வெளிப்புறத் தோற்றம் மட்டும் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.
இதுவரை பார்த்த வீடுகளை போல் இல்லாமல் இந்த வருடம் ரொம்பவும் கலர்ஃபுல்லாக பிக் பாஸ் வீடு அமைக்கப்பட்டு இருக்கிறது. வீடு முழுக்க பச்சை மற்றும் ஊதா வண்ணங்கள் அதிகமாக இருக்கிறது. கலர்ஃபுல் லைட்டுகளுடன், நீச்சல் குளம், புல்வெளி, போட்டியாளர்கள் அமர்வதற்கு சேர் என்று அசத்தலாக இருக்கிறது.
அத்துடன் வெள்ளை மற்றும் ஊதா நிறம் கலந்த மிகப்பெரிய சிம்மாசனம் ஒன்று நட்ட நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜாக்கள் அமரும் ஆசனம் போன்ற அந்த இருக்கையை பார்க்கும் போது வாராவாரம் தேர்ந்தெடுக்கப்படும் வீட்டின் தலைவர் அதில் அமர்வார் என்று தெரிகிறது.
இப்படி கலக்கலாக வெளிவந்த அந்த ப்ரோமோவில் கமல்ஹாசன் வீடு தயாராகி விட்டது, வீரர்களும் தயாராகி விட்டார்கள், வேட்டைக்கு நீங்க ரெடியா என்று கேட்கிறார். இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் நாளை முதல் காத்திருக்க முடியவில்லை என்று பல ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
தற்போது இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் வைரலாகி வரும் நிலையில் நாளை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இனி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவில் களை கட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.