மருமகனை வாளாள் வெட்டிப் படுகொலை செய்த மாமனார்!

ஹபரணை – சேனாதிரியாகம பிரதேசத்தில் நபர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்தவரின் மனைவியின் தந்தையே இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கெட்டஹெத்த ஹிங்குரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.
கொலையைச் செய்த சந்தேகநபரும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.