ஞான பௌத்த பிக்கு ஒருவரது 40 கோடிக்கும் ஆட்டையை போட்ட திலினி (Videos)
கொழும்பு உலக வர்த்தக மையத்தில் ஆடம்பரமான அலுவலகத்தை நடத்திக் கொண்டே பெரும் தொகையை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன் பல போராட்டச் சம்பவங்களுக்கு முகம்கொடுத்த பிரபல ஞானம்சார பௌத்த பிக்கு தொடர்பான உண்மைகள் விசாரணையில் தெரியவந்துள்ளன.
உரிமையாளர் சம்பந்தப்பட்ட பெண்ணின் தொழிலிலும் பணத்தை முதலீடு செய்துள்ளார்.
அந்த பெண்ணின் தொழிலில் சுமார் 40 கோடி ரூபாய் மட்டுமே அவர் முதலீடு செய்யப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இவரை தவிர பெரும் அரசியல்வாதிகளும் , பெரும் பணக்காரர்களும் பண முதலீடுகளை செய்துள்ளார்கள்.
இதற்கு மேலதிகமாக மேல்மாகாண முன்னாள் ஆளுநர் ஒருவர் பெண்ணின் தொழிலில் 45 கோடி ரூபாவை முதலீடு செய்துள்ளார்.
கைதாகியுள்ள திலினி பிரியமாலி எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.