குடும்பஸ்தர் கழுத்தறுத்துப் படுகொலை!

குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடூர சம்பவம் அனுராதபுரம் – கட்டுகெலியாவ பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
35 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான உதித்த எரன்ன ஜயதிலக்க என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் லோலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறே இந்தக் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சில சந்தேகநபர்கள் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.