கொழும்பில் பொலிஸ் பதிவை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை.

வௌ்ளவத்தை, பம்பலப்பிட்டி உள்ளிட்ட கொழும்பு மாநகரப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்றுப் பொலிஸார் அங்குள்ளவர்களின் தகவல்களைத் திரட்டுவதை நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தொலைபேசியூடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.
பொதுமக்களின் தகவல்களை வீடு வீடாகச் சென்று பொலிஸார் பதிவு செய்வது தவறென ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்று மனோ கணேசன் ‘ருவிட்’ செய்துள்ளார்.
உடனடியாக இது தொடர்பில் உரிய பணிப்புரையை வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது மனோவிடம் உறுதியளித்துள்ளார் என்றும் மனோ குறிப்பிட்டுள்ளார்.