பிக் பாஸ் சீசன் 6 மழலைப் பேச்சால் மயக்கும் 21 வயது அழகி!
விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக தொடங்கி தற்போது 24 மணி நேரமும் பார்ப்பதற்கு ஏற்றார்போல் ஹாட்ஸ்டாரில் வெளியிட்டு வருகின்றனர். கடந்த 3 சீசன் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறாததால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை கச்சிதமாக தேர்வு செய்துள்ளனர்.
மேலும் பிக் பாஸ் சீசன் 6 ஜிபி முத்து, ஜனனி, விஜே மகாலட்சுமி, அமுதவணன் ஆகிய பல பிரபலங்கள் கலந்து கொண்டு போட்டியை களைகட்டி வருகின்றன. ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் செய்யும் சேட்டை ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. அதேபோல் ஜனனி பேசும் பேச்சு அவர் செய்யும் சேட்டைகளும் ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது. அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் எதார்த்தமான பேச்சால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றனர்.
ஜனனி பிக்பாஸ் சீசன் 6 நுழைந்தவுடனே இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளனர். அதாவது ஜனனி ஆர்மி வைத்து ரசிகர்கள் அவரை ரெண்டே நாளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் அவரது புகைப்படமும் அவர் செய்யும் சேட்டைகளையும் வீடியோக்களாக வெளியீட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.
எந்தவிதமான சுயநலமில்லாத சிரிச்சிக்கிட்டு அழகான இலங்கை தமிழர்களை கவர்ந்த அந்த பொண்ணு பேரு ஜனனி குணசீலன் இந்தப் பொண்ணை ஸ்ரீலங்கா மக்கள் செல்லப்பிள்ளை சொல்ற அளவுக்கு ஸ்ரீலங்காவில் தெரியாத ஆளே இல்லை என்றுதான் கூறவேண்டும்.
அதுமட்டுமில்லாமல் ஐபிசி தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றியுள்ளார். காமெடி வீடியோஸ் நடிச்சிருந்தாங்க அது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் நிறைய போட்டோ ஷூட் பண்ணி இருக்காங்க அது அவங்களுக்கு பிடிக்குமாம்.
மேலும் ஜனனிக்கு கலாச்சார சீருடை அணிவது தான் பிடிக்குமாம் அதனாலதான் அவங்க போட்டோ ஷூட் பார்க்கிறதுக்கு அழகா இருக்காங்க என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இருபத்தோரு வயசுதான் இருக்கும் அவங்களுக்கு பிக்பாஸ் முதல் சீசன் இருந்தே பிக்பாஸில் கலந்துகொள்ள ஆர்வம் இருந்ததாக கூறி உள்ளார்.