நிதி மோசடி பெண் திலினி மேலதிக விசாரணைக்கு …. (Video)
சர்ச்சைக்குரிய நிதி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி இன்று (12) கொழும்பு உலக வர்த்தக நிலையத்திற்கு சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில் அழைத்து வரப்பட்டார்.
நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட விசேட உத்தரவின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அவரை விசாரணைக்காக உலக வர்த்தக நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளது.
மேலதிக விசாரணைக்காக அவர் மேலும் மூன்று இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கொழும்பு உலக வர்த்தக நிலையத்தில் அலுவலகம் ஒன்றை நடத்தி சமூகத்தின் செல்வந்தர்களை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலிக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இதுவரை எட்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவர் இதுவரை மோசடியாகப் பெற்றுள்ள தொகை சுமார் 250 கோடி ரூபாவாகும் என முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, உயர்தர வர்த்தகர்கள் மற்றும் பிறரிடம் எரிபொருளை வாங்குவதாக கூறி அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த பெண் தொடர்பான பண மோசடிகள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் உண்மையல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுடன் இன்று (12) உலக வர்த்தக நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
CID அதிகாரிகள் அவரை உலக வர்த்தக மையத்தின் மேற்கு கோபுரத்தின் 34 வது மாடியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வழக்கமாக காவலில் உள்ள சந்தேக நபர்களுக்கு பயன்படுத்தப்படும் கைவிலங்குகள் இல்லாமல் அழைத்துச் சென்றனர்.
இந்த விசாரணை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவும், அலுவலக வளாகத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்யவும், விசாரணை தொடர்பான ஆவணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழமையாக தடுப்புக்காவலில் இருக்கும் சந்தேகநபர்கள் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுடன் திலினி பிரியமாலி உலக வர்த்தக நிலையத்திற்கு வந்த போது கைவிலங்கிடப்படாமல் இருந்தமை விசேட அம்சமாகும்.
CID அதிகாரிகள் அவரை உலக வர்த்தக மையத்தின் மேற்கு கோபுரத்தின் 34 வது மாடியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த விசாரணை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அலுவலக வளாகத்தில் உள்ள ஆவணங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கையகப்படுத்தவுள்ளது.
நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட திலினி பிரியமாலி நிலையத்தை குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று நான்கு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு அவரை அழைத்துச் சென்றதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.