யாழ். தாவடியில் ஹெரோய்ன் விற்றவர் சிக்கினார்!

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக தாவடி தெற்குப் பகுதியில் உயிர்கொல்லி ஹெரோய்ன் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரிடமிருந்து 80 மில்லி கிராம் உயிர்கொல்லி ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் நீண்ட காலமாக உயிர்கொல்லி ஹெரோய்ன் வியாபாரத்தில் ஈடுபட்டார் எனவும், வீட்டில் வைத்தும் வியாபார நடவடிக்கையை முன்னெடுத்தார் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
யாழ். மாவட்டத்திலுள்ள உயிர்கொல்லி ஹெரோய்ன் வியாபாரிகளுடன் இவர் நீண்ட காலமாகத் தொடர்பைப் பேணி வந்தார் எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.