கோதுமை மாவின் விலை இன்று முதல் குறைப்பு.

கோதுமை மாவின் மொத்த விலை இன்று முதல் குறைக்கப்படுகின்றது என்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையானது 375 ரூபாவில் இருந்து 290 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.