திலினியிடம் 75 கோடியை பறிகொடுத்த தொழிலதிபரின் தகவலால் சிக்கப் போகும் நடிகைகள் !
திலினியிடம் 75 கோடியை பறி கொடுத்த கலாநிதி பட்டதாரி தொழிலதிபர் புலனாய்வு துறைக்கு வந்து மேலும் தகவல்களை வழங்கியுள்ளார்.
முன்னாள் சக்தி வாய்ந்த அமைச்சரின் சீடன் இன்று அல்லது நாளை கைதாகலாம்!
பணம் கொடுத்த தொழிலதிபர்களை பிளாக்மெயில் செய்த நடிகைகளின் விபரங்களும் விரைவில் வெளிவர உள்ளன!
கொழும்பு கோட்டை உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியில் தனது அலுவலகத்தை நடத்திக் கொண்டு பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலியிடம் 75 கோடி ரூபாவை இழந்த வைத்திய கலாநிதி பட்டம் பெற்ற வர்த்தகர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (13) முறைப்பாடு செய்துள்ளார்.
பிஎச்டி பட்டம் பெற்ற இத் தொழிலதிபர் மலேசியாவுடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருப்பதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த வர்த்தகர் பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தி வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளதுடன், அதற்கமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நாட்டில் பிரபல நடிகை ஒருவரை பயன்படுத்தி இந்த தொழிலதிபரை பிளாக்மெயில் செய்ய திலினி பிரியாமாலி முயற்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, திலினி பிரியமாலியின் ஒப்பந்தப்படி தொழிலதிபர்களால் மிரட்டப்பட்ட பல நடிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் தனியாக இந்த மோசடியை செய்யவில்லை எனவும், இவருடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்ட மற்றுமொருவர் பற்றிய தெளிவான தகவல்கள் இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகளின் மூலம் தெரிய வருவதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமாக இருந்த சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் தயார் நிலையில் உள்ளதாக பொலிஸ் தகவல் வெளியாகியுள்ளது. பல சந்தர்ப்பங்களில் அவரது கணவராகவும் தோன்றிய இவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.