களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் வெள்ள அபாய எச்சரிக்கை.
அடுத்த 3 முதல் 48 மணித்தியாலங்களில் களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தெஹிம்பிவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பயகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயரும் அபாயம் உள்ளதால், திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்லை, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-அல, கட்டான, வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் உருவால் ஓயா பள்ளத்தாக்குகளுக்கு உட்பட்ட தாழ்நிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .
களு கங்கையின் நீர்மட்டம் உயரும் அபாயம் உள்ளதால் பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.