முகமாலை கோர விபத்தில், கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் படுகாயம்.

முகமாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் 42 பேர் படுகாயமடைந்தனர்.
கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸுடன் டிப்பர் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஏ – 9 வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டிகள் மூலம் வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் 14 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், 28 பேர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்குக் காரணமான டிப்பர் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
விபத்து தொடர்பில் பளைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.