துருக்கியில் பயங்கரம் சுரங்கத்தில் தீ: 40 பேர் பலி.

துருக்கியின் வடக்கு பகுதியில் கருங்கடல் கரையோர மாகாணமான பார்ட்டினில், அமாஸ்ரா நகரில் அரசுக்கு சொந்தமான டிடிகே அமாஸ்ரா மியூசிஸ் முதுர்லுகு சுரங்கத்தில், நேற்று முன்தினம் 110 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மீத்தேன் வாயு விபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
இதனால், தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். 58 பேர் தப்பி வெளியே வந்து விட்டனர். 40 பேர் வெளியேற முடியாமல் பரிதாபமாக எரிந்து இறந்தனர். 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒரு சுரங்கத் தொழிலாளியின் நிலை தெரியவில்லை.