மீண்டும் எரிபொருட்களின் விலையில் மாற்றம்.

இன்று (17) இரவு 9 மணி முதல் பெற்றோல் 92 ஒக்ரெய்ன் விலை லீட்டருக்கு 40 ரூபாவாலும், ஓட்டோ டீசல் விலை லீட்டருக்கு 15 ரூபாவாலும் குறைக்கப்படுகிறது.
இதன்படி பெற்ரோல் 92 இன் புதிய விலை லீட்டருக்கு ரூ.370 ஆகவும், ஓட்டோ டீசல் லீட்டருக்கு ரூ.415 ஆகவும் இருக்கும்.
ஏனைய பெற்றோலிய பொருட்களின் விலைகள் அப்படியே இருக்கும்.