தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுசெயலாளர் விலகியுள்ளதாக மனோ அறிவிப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுசெயலாளர் சந்திரா சாப்டர் வயது மூப்பின் காரணமாக பொது செயலாளர் பதவியிலிருந்து சுயமாக விலகியுள்ளார் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைபேறு மற்றும் வளர்ச்சிக்கு கணிசமாக பங்களித்துள்ள சாப்டர் அவர்களின் இடை விலகலை நாம் கனத்த இதயத்துடன் புரிந்துக்கொள்கின்றோம்.
கூட்டணியின் அரசியல் குழு விரைவில் கூடி, கூட்டணி யாப்பிற்கு இணங்க புதிய பொது செயலாளரை தெரிவு செய்யும் என கூட்டணி தலைவர் மேலும் கூறியுள்ளார்.