நெடுங்கேணியில் இளம் யுவதி சுட்டுப் படுகொலை!

வவுனியா, நெடுங்கேணி – சிவா நகர் பகுதியில் இன்றிரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சிவா நகர் பகுதியில் வசிக்கும் துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதி தனது வீட்டுக்கு வெளியில் வரும்போது அவர் மீதே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.