மொட்டு பரிந்துரைத்த நான்கு பேருக்கு அமைச்சர் பதவி வழங்க இயலாது : ரணில் திட்டவட்டம்

எஞ்சிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி மீண்டும் மறுத்துள்ளார்.
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை அமைச்சர்களாக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.
இந்நிலைமையால் ஏனைய அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் மேலும் தாமதமாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.