ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த 26 வயது பெண் அமைச்சராக தெரிவு.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் புதிய அரசு சமீபத்தில் பொறுப்பேற்றது. பிரதமர் உல்ப் கிறிஸ்டெர்சன் புதிய அமைச்சரவையை நேற்று அறிவித்தார். இதில், ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த ரோமினா பூர்மோக்தாரி, 26, பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கு இதற்கு முன், 27 வயதுடைய இளைஞர் அமைச்சர் பதவி வகித்துள்ளார். அந்த சாதனையை முறியடித்துள்ள ரோமினா, உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.