ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி அட்டகாசம்: மேலும் 9 பேர் சிக்கினர்!

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்துச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் மேலும் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
22 வயது முதல் 43 வயது வரையான சந்தேகநபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கொழும்பு -10, கோணகம, குருநாகல், நிகதலுபொத்த மற்றும் கொழும்பு – 10 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.