இலங்கை வந்தடைந்தார் டொனால்ட் லூ.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இலங்கை வந்தடைந்தார்.
இன்று பகல் இலங்கை வந்தடைந்த டொனால்ட் லூவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வரவேற்றார். இதனை அமெரிக்கத் தூதுவர் ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – இலங்கை உறவுகள், இலங்கையின் பொருளாதார நிலைமை நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே டொனால்ட் லூ இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.