நிமலராஜனின் நினைவேந்தல் இன்று! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அஞ்சலி.

யாழ்ப்பாணத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22 ஆவது நினைவு தினம் இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்படும் வவுனியா பிரதான தபாலகத்துக்கு அருகாமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார்,

“தமிழ் ஊடகவியலாளர் நிமலராஜனின் 22 ஆவது ஆண்டு படுகொலை நினைவு நாள் இன்றாகும். நிமலராஜன் படுகொலை தமிழ் ஜனநாயகத்தைக் கொன்றது.

rpt

தமிழரின் ஜனநாயகம் தமிழ்த் தேசியத்தை உயிர் மூச்சாகக் கொண்டது. இலங்கை ஜனநாயகம் என்பது சிங்களவரின் ஜனநாயகம். அது தமிழர்களை ஒடுக்குவதற்கு மாத்திரமே உள்ளது.

தமிழர்களின் ஜனநாயகம் என்பது, பாதுகாப்பான, பாதுகாக்கப்பட்ட தமிழர் தாயகம் வரும்போதுதான் தமிழர் ஜனநாயகத்துக்கு உயிர் வரும்.

நிமலராஜன் உயிருடன் இருந்திருந்தால், தமிழ் அரசியல்வாதிகளின் முடிச்சுக்களை தனது பலம் வாய்ந்த எழுத்துக்களால் அவிழ்த்து அம்பலப்படுத்தியிருப்பார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.