படகு சவாரி உட்பட பல விளையாட்டுக்களை உள்ளடக்கிய சுற்றுலா மையம்.
வவுனியாவில் படகு சவாரி உட்பட பல விளையாட்டுக்களை உள்ளடக்கிய சுற்றுலா மையம் திறந்து வைப்பு
வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் வவுனியா நகரசபைக்குட்பட்;ட பகுதியில படகு சவாரி உட்பட பல்வேறு விழையாட்டு செயற்றிட்டங்களை உள்ளடக்கிய சுற்றுலா மையம் இன்று (30.08.2020) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இச் சுற்றுலா மையத்தினை வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் நடா வெட்டி திறந்து வைத்தார்.
இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ள சுற்றுளா மையத்தில் படகு சவாரி, நீருக்கு நடுவில் பிரமாண்ட சிற்றுண்டிச்சாலை, சிறுவர்களுக்கான விநோத விளையாட்டுக்கள், மீன் மசாஜ், 3டி சினிமா, விடியோ கேம்ஸ் என்பன உள்ளங்கியுள்ளன.
வவுனியா சுற்றுலா மையத்தை திறந்து வைத்து உரையாற்றிய நகரசபை தலைவர்,வவுனியாவில் சிறந்த பொழுது போக்கு மையாமாக இப்பூங்கா திகழ்கிறது. வடக்குமாகாண சுற்றுலா அமைச்சின் அங்கீகாரத்துடன் வவுனியா நகரசபையால் இச்சுற்றுலாமையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வவுனியாவில் 700 மில்லியன் செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.
குறித்த சுற்றுலா மையத்தின் குத்தகையாளராக U One Event Management Group நிறுவனத்தின் பணிப்பாளர் இளங்குமரன் யுவன் கருத்து தெரிவிக்கையில்
வவுனியா மக்களுக்காக வித்தியசாமான முறையில் ஒரு பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு இப்படகு சவாரி பூங்கா திறக்கப்பட்டுள்ளது. வவுனியாவிற்கு வரும் உள்ளுர் வெளியூர் சுற்றுலா பயணிகள் இச்சுற்றுலா மையத்தினூடாக பொழுதை கழிக்க முடியும் என தெரவித்தார்