அரசாங்கக் கட்சி எம்.பி குழுவில் உள்ளோர் 22க்கு எதிர்ப்பு : விஜயதாச வரவில்லை.
இன்று காலை ஆரம்பமான ஆளுங்கட்சியின் அவசர குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22வது திருத்தத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கூட்டத்தில் ஏறக்குறைய 60 மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பேராசிரியர் ஆஷு மாரசிங்க கலந்துகொண்டுள்ளார். இதன்படி, 22வது திருத்தச் சட்டத்திற்கு எம்.பி.க்களின் எதிர்ப்பை ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறு ஆஷு மாரசிங்கவிற்கு மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி இன்னும் பாராளுமன்றத்தின் மேல் மாடியில் தங்கியிருப்பதாக ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். அப்படியானால், குழு கூட்டத்திற்கு உடனடியாக வருமாறு ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சட்டத்தை வரைந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூட்டத்தில் பங்கேற்கவில்லை.