நெதர்லாந்தை வீழ்த்தி 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் சுற்றில் ஏ பிரிவில் இன்று கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
அதில் கீலாங் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்க தொடங்கிய முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, நெதர்லாந்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து இலங்கை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பதும் நிசாங்கா 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 79 ரன்கள் (5 சிக்சர்கள், 5 பவண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். இதையும் படியுங்கள்: டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் தனஞ்செயா டி சில்வா ரன் எதுவும் எடுக்கவில்லை.
தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்கா 31 ரன்களும் பனுகா ராஜபக்ச 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்தது.
இந்நிலையில், நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.