தேவையின்றி ஹார்ன் அடித்தால் இனி ரூ.2000 அபராதம்….புதிய விதிகள் அறிவிப்பு
தமிழ்நாடு போக்குவரத்து கழகம், மோட்டார் வாகன சட்டம் 2019இன் கீழ் பல்வேறு விதிமுறை மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, விதிமீறிகள் தொடர்பான குற்றங்களுக்கான அபராதத் தொகையை அரசு மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தேவையின்றி ஹார்ன் அடித்தால் இனி ரூ.2000 அபராதம் செலுத்த வேண்டும். சாலையில் வாகன பந்தயம், சாகசங்களில் ஈடுபட்டால் இனி ரூ.5000க்கு பதில் ரூ.10,000 அபராதம். காப்பீடு செய்யாத வாகனத்தை பயன்படுத்தினால் இனி ரூ.4,000 அபராதம். செல்போன் பேசிக்கொண்டோ, அதிவேகமாகவோ வாகனம் ஓட்டினால் இனி ரூ.1000க்கு பதில் ரூ.10,000 அபராதம். சோதனையின் போது ஓட்டுநர் உரிமத்தை தர இயலாவிட்டால் இனி ரூ. 500க்கு பதில் ரூ.1500 அபராதம்.” இவ்வாறு புதிய விதிமுறைகளுக்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
தற்போது, இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுனருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.