22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்க தயார்: சஜித் பிரேமதாச.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சமகி ஜன கூட்டமைப்பு இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மூன்று நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
1, அரசியலமைப்புச் சபைக்கு சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பதில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் தெரிவு,
2, இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு விதிக்கப்பட்ட தடையை அப்படியே வைத்திருப்பது
3, இரண்டரை வருடங்களில் பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை அப்படியே வைத்திருத்தல்
இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆதரிப்பதற்கான நிபந்தனைகளாக மேற் கண்ட மூன்று விடயங்கள் முன்வைக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.