ஒக்டோபர் 25ஆம் திகதி தமிழ்ப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

தீபாவளியையொட்டி எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்குப் பதிலீட்டு நாளாக எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை தமிழ்ப் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளியைத் தமிழ் மக்கள் கொண்டாடவுள்ளனர். அன்று அரச – வங்கி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.