வெளிநாட்டு பறவைகள் அம்பாறையில் சஞ்சரிப்பு.

காலநிலை மாற்றம் காரணமாக வெளிநாட்டுப் பறவை இனங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
பெரியநீலாவணை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவைகள் வருகை தருகின்றன.
இந்தப் பறவைகளை இரசிப்பதற்காகப் பலரும் குறித்த இடங்களுக்கு வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இம் மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகள் இங்கு வந்து தங்கியுள்ளன. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் கூடு கட்டத் தொடங்கும்.
இந்தப் பறவைகள் 3 ஆயிரம் மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷியா, ஜேர்மனி, பிலிப்பைன்ஸ், சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன.
இந்தப் பறவைகள் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்துப் பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் நாரை, அன்னம் உள்ளிட்ட வலசைப் பறவை இனங்கள் அதிகம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.