22 நிறைவேற்றப்பட்டது! ஆதரவாக 179! எதிராக 1 !
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (21) நடைபெற்றது.
22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக 01 வாக்கும் கிடைத்தன.
பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார்.
பிந்திய செய்தி:
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன் மூன்றாம் வாசிப்பில் 174 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்ததுடன் எதிராக எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கவில்லை.
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. வரைவின் இரண்டாம் வாசிப்பில் ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் பதிவாகின. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எதிராக வாக்களித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட 44 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பதும் விசேட அம்சமாகும்.