லாரி – பேருந்து மோதி கோர விபத்து.. தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற 15 பேர் பலி… 40 பேர் படுகாயம்

மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதியருகே சென்று கொண்டிருந்த பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியதில் விபத்துக்குள்ளாகியது. இதில் நிகழ்விடத்திலேயே 12 பேர் நிலையில் மொத்தமாக 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐதராபாத்திலிருந்து உத்தரப் பிரதேசம் மாநிலம் கோராக்பூருக்கு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இதில், தீபாவளி கொண்டாட்டத்திற்காக அனைவரும் சொந்த ஊர் சென்றுள்ளனர்.
இந்த பேருந்து மத்தியப் பிரதேச மாநிலம் சுஹாகி பஹரி அருகே சென்ற போது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி திடீரென பிரேக் போட்டதால், அதன் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 35 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருந்தில் பயணித்தவர்கள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த துயர விபத்து சம்பவத்திற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.