புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம்….சிக்கிய மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்
லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட சென்னை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரின் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் லட்சக்கணக்கில் ரொக்கப் பணம் சிக்கியது.
வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொளத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வரதட்சணை புகார் அளித்திருந்தார்.
விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் அப்பெண் கணவரின் வீட்டிற்குள் நுழைந்து தனது உடைமைகளை எடுத்து சென்றது தொடர்பாக கணவர் புகார் அளித்தார்.
இந்நிலையில் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அப்பெண்ணிடம் காவல் நிலைய ஆய்வாளர் அனுராதா 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கினார்.
கடந்த 19-ம் தேதி ஆய்வாளர் அனுராதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அனுராதா வீட்டில் லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 7 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.