60 கிலோ கேரள கஞ்சா மாதகலில் இன்று மீட்பு.

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் சுமார் 60 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இன்று அதிகாலை 2 மணியளவில் மாதகல் கடற்கரையோரமாகக் குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதைக் கடத்தி வரப் பயன்படுத்தப்பட்டது எனக் கருதப்படும் படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் படகு என்பன இளவாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.