காசினோ மன்னன் தம்மிக்க 150 கோடி செலுத்த வேண்டும் !

இலங்கையில் செயற்படும் கசினோ வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் தடவையாக விசேட உரிமம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாட்டில் இயங்கிவரும் ஒவ்வொரு சூதாட்ட நிலையங்களுக்கும் அனுமதிப்பத்திரத்திற்காக 500 மில்லியன் ரூபா (50 கோடி) கட்டணமாக அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதனை ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேசினோ வர்த்தக ஒழுங்குமுறை சட்டம் 2010 இன் கீழ் உள்நாட்டு வருவாய் ஆணையாளர் நாயகம் இந்த விதியை அறிவித்துள்ளார்.
இந்தச் சட்டத்தின் கீழ் கசினோ வர்த்தகங்களுக்காக முதல் தடவையாக அறவிடப்படும் 50 கோடி வரியானது இலங்கையின் கசினோ வர்த்தகத்தின் அரசனாகக் கருதப்படும் தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான கசினோ வர்த்தகத்தையே பாதிக்கும்.
தற்போது இயங்கி வரும் ஐந்து முக்கிய சூதாட்ட விடுதிகளில் மூன்றை அவரது வணிக போர்ட்ஃபோலியோ கொண்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்னதாகவே அவர் தனது பணிப்பாளர் பதவியை விட்டு விலகியிருந்த போதிலும், வர்த்தகம் இன்னமும் அவரது தலைமையின் கீழ் இருப்பதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேலிஸ், எம்ஜிஎம் மற்றும் பெலாஜியோ ஆகிய நிறுவனங்களின் சூதாட்ட வணிகங்கள் அவருக்குக் கீழ் உள்ளதால், அக்டோபர் 30 ஆம் தேதிக்கு முன் உரிமக் கட்டணமாக 150 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.