பச்சிலைபள்ளி பிரதேசபை சிறப்பாக எழுச்சிகரமாக நடாத்திய கலாசார பண்பாட்டு பெருவிழா!

பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் பண்பாட்டு பெருவிழா 22.10.2022 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பளை நகரில் தமிழர் பண்பாட்டுத்தொன்மை, கலை, கலாச்சாரம், பண்பாட்டடையாளம், வீரம், பாரம்பரியம், வீரவிளையாட்டு, ஆடல், பாடல், கிராமியக்கூத்து, நாட்டியம் என்பனவற்றை பறைசாற்றும் வகையில் இடம்பெற்றது.
தமிழர் வரலாற்று வழித்தடல் வாழ்வியல் விழுமியங்களை எம் கண் முன்பே வெளிப்படுத்தும் பொம்மலாட்டம், வீரப்பறை, சிலம்பம், காவடி, கரகம், நம் தமிழ் மன்னர்களின் பிரதி உருவச்சிலை பவனி , தவில் நாதஸ்வரம், பாரம்பரிய இனிய வரவேற்பு என்வற்றை வெளிச்சமிடும் கலைகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது…