யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் காட்டுப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் சசிகுமார் கௌசல்யா என்ற 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் காட்டுப் பகுதியில் நேற்று இரவு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த பெண்ணின் சடலம் குறித்த பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற மடு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளதோடு, சடலம் பண்டிவிருச்சான் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.