சந்திரிகா படுகொலை குற்றவாளிகள் மூவருக்கும் பொது மன்னிப்பு!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கைதிகள் உட்பட எட்டு தமிழ் கைதிகளுக்கு , ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் , அவர்களை விடுவிக்க அனுமதி பெற்றுக்கொண்டதுடன், அதே இணக்கப்பாட்டுடன் விடுதலைக்கு தேவையான பின்னணியும் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பின் 34 வது பிரிவின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் நடத்திய கலந்துரையாடலின் விளைவாக இந்த கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அதற்கு முன்னதாக பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் பேரில் அவர்கள் குறித்த ஆரம்பக்கட்ட தகவல் கண்காணிப்பு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டது. .
ஒப்புதல் அறிக்கை குறித்து நீதி அமைச்சர் மற்றும் அவர் மூலமாக சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.