அமைதியான யால பூங்காவுக்குள் ஜீப்களில் குறளிவித்தை? (Video / Photos)

யால பூங்காவுக்குள் 40 ஜீப்களில் சென்ற ஒரு கும்பல் சட்டவிரோதமாக வித்தைகள் காட்டி ஓட்டிச் செல்வதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வருகின்றன.

இவ்வாறு செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். அந்த குழுவில் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மகனும் இருந்தாக சொல்லப்படுகிறது. இவர்களுடன் ஜனாதிபதியின் காரியதரிசி ஒருவரும் இருந்ததாக அறிய முடிகிறது.

இந்த விடயம் தொடர்பான அனைத்து தகவல்களையும் உறுதிப்படுத்தும் அனைத்து ஆதாரங்களும் திணைக்களத்திடம் உள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்.

ஆனால் இவர்கள் விசேட அதிதிகள் அல்ல சாதாரண சுற்றுலாப் பயணிகள் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அரசு நடவடிக்கை எடுக்குமா? என பரவலாக சமூக வலைத் தளங்களில் விபரங்களுடன் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.


அங்கிருந்த சில வாகனங்களின் படங்கள் இவை

Leave A Reply

Your email address will not be published.