இடைக்கால கொடுப்பனவு வழங்குமாறு மனு : 5 லட்சம் அரசு ஊழியர்கள் தயார்!
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிக்க முடியாத பட்சத்தில் இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு அரச ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐந்து லட்சம் அரசு ஊழியர்கள் கையெழுத்திட்ட மனுவுடன் அரசிடம் கோரிக்கையை முன்வைக்க அரசு ஊழியர் சங்கங்களின் ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
பணவீக்கம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பெறப்படும் சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதாக இல்லை என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கம் அதிக அக்கறை காட்டவில்லை என சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
உதாரணமாக, உலக வர்த்தக சந்தையில் எரிபொருள் விலை மேலும் குறைய வாய்ப்புள்ள நிலையில் அரசாங்கம் அவ்வாறு செய்யாது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திரு.பிரதீப் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.