விழிப்புணர்வு அற்றவர்களின் வாழ்வில் வழிகாட்டும் ஒளி விளக்காக வெண்பிரம்பு தினம் அனுஷ்டிப்பு.
விழிப்புணர்வு அற்றவர்களின் வாழ்வில் வழிகாட்டும் ஒளி விளக்காக வெண்பிரம்பு தினம் கடந்த (20) மாந்தை கிழக்கு பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
வெண்பிரம்பு தினம் உலகெங்கும் தேசிய அளவில் கடைப்பிடிக்கபடும் நாளாக , 1964ஆம் ஆண்டிலிருந்து ஒக்டோபர் 15ம் திகதிகளில் கடைபிடிக்கப்படுகின்றது.
1931ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு அரிமா கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநாட்டில் , வெள்ளை பிரம்பு (White Cane) கண்பார்வை அற்றவர்களின் அடையாளம் என பிரகடன படுத்தப்பட்டதுடன் , அதற்கான சட்ட அங்கீகாரமும் சர்வதேச ரீதியாக வழங்கப்பட்டது.
உலகெங்கும் பரந்துவாழும் இலட்சக்கணக்கான விழிப்புலன் அற்ற மக்களுக்கு உதவும் நோக்குடன் , மக்களின் கவனத்தை ஈர்த்து சமூக அங்கீககாரத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஆண்டு தோறும் ஒக்.15ம் திகதி அன்று வெண்ம்பிரம்பு தினம் நினைவு கூறப்படுகின்றது.
1969ம் ஆண்டு பன்னாட்டு சம்மேளனம் கொழும்பில் நடாத்திய , பன்னாட்டு மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் மேற்க்கொள்ள பட்டிருந்தது.
விழிப்புணர்வு அற்றவர்களின் வாழ்வில் வழிகாட்டும் ஒளி விளக்காக, வெண்பிரம்பு கருதப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மாந்தை கிழக்கு பிரதேசத்தில், இயற்கையாகவும் செயற்கையாகவும் கண்பார்வை அற்றவர்களை கௌரவப்படுத்தும் நோக்குடன் அவர்களின் தேவைகளையும் சவால்களையும் வெளிக்கொணரும் விதத்தில், இன்று BMZ நிதி அனுசரணையுடன் Child fund வழிகாட்டலுடன் VOICE மற்றும் ORHAN நிறுவனங்கள் இணைந்து CBR=lll திட்டத்தின் ஊடாக, மாந்தை கிழக்கு பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பால் இந்நிகழ்வானது நடத்தப்பட்டது.
இந்நிகழ்வின் மூலம் சமூக சேவை திணைக்களத்தின் தரவுகளின்படி 30 பயனாளிகளை கௌரவித்தமை குறிப்பிடதக்கது.
அத்துடன் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும் இனங்கானப்பட்டு அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் தளமாகவும் இந்நிகழ்வானது அமைந்திருந்தமை சிறப்பு அம்சமாகும்.