கைதான , சிறிதம்ம தேரருக்கு டெங்கு
காய்ச்சல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் தற்போது வைத்தியசாலை அறையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கல்வெவ சிறிதம்ம தேரர் தற்போது 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கல்வெவ சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி பல்கலைக்கழக மாணவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவார காலமாக கடுமையான சுகவீனமுற்றிருந்த சிறிதம்ம தேரர், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கீழ் இருந்தபோதே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் அக் காலகட்டத்தில் அவரை மருத்துவர் ஒருவரிடம் ஆஜராகவில்லை என்றும் குழு குற்றம்சாட்டி உள்ளது.
கடந்த 22ஆம் திகதி சிறிதம்ம தேரரை அவரது சகோதரி சென்று பார்த்த போதே அவர் நோய்வாய்ப்பட்டு இருப்பதை அறிந்ததாகவும், இது தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடாக விசாரிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் அவரது உடல்நிலை குறித்து வழக்கறிஞர்கள் மூலம் விசாரிக்கும் வாய்ப்பை ஏன் தடுத்ததார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
கல்வெவ சிறிதம்ம தேரர் போலவே , வசந்த முதலிகே சரும நோயால் அவதியுறுவதாக தெரிய வருகிறது.