சனீஸ்வரன் பகவான் நமக்கு நன்மை செய்ய..,
ஏழரை,அஷ்டம,அரிஷ்டாடம சனி,கண்டக சனி,சனி திசை,சனி புத்தி நடப்பவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள்!!
*சனியின் வாகனம் காக்கை, எருமை.மொழு அன்னிய மொழி!
*உலோகம் இரும்பு, ஆடை கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன்,மரம் வன்னி, தானியம் எள்ளு, மலர் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும்.
*சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் அசைவம் உண்ணாமல், சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு வருவது சிறப்பான பரிகாரம் ஆகும்.
*எல்லா தெய்வங்களுக்கும் தீபம் ஏற்றி விட்டு அரச்சனை செய்தாலும்,சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்துவிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
*சனிக்கிழமை தோறும் தயிர் சாதத்தில் எள் கலந்து காகத்திற்கு வைப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.
*சனி பகவானால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில், கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிக்கையில், இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி, பின்னர் காலையில் எழுந்து நீராடி, சனி பகவானை 9 முறை வலம் வந்து, ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் கொஞ்சம் உளுந்தை தரையில் இட வேண்டும்.உளுந்து தானியம் தானம் சனி பகானின் நல்லாசி கிடைத்திட சிறந்த பரிகாரம் ஆகும்.
*மாற்று திறனாளிகளுக்கு உடை எடுத்து கொடுப்பது,உணவு அளிப்பது சிறந்த பரிகாரம் ஆகும்.
*பொதுவாக ஏழரை,அஷ்டம இப்படி சனி பகவானால் பாதிக்கப்படுவபவர்கள் “சனியனே”என்ற வார்த்தையை அறவே பயன்படுத்தக்கூடாது.
*சனி பகவான் நீதி மான்!அவர் அருள் கிடைக்க நீதி,நியாயம்,தர்மம் தவறாமல் நடந்தால் அவர் அருள் கிடைக்கும்.