செவ்வாய் திசை! பல்வேறு விதமான பலன்களை வழங்குவார்.
செவ்வாய் தனது திசை காலத்தில் பல்வேறு விதமான பலன்களை வழங்குவார்.ஒருவரது வாழ்க்கையில் செவ்வாய் தெசை யானது 7 வருடங்கள் நடக்கும்.
உடல் வலிமைக்கும், இரத்த ஓட்டத்திற்கும், பூமிக்கும், நிர்வாக பதவி, அதிகாரம், உடன் பிறப்புக்கு காரகனாக செவ்வாய் விளங்குகிறார்.
மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகள் செவ்வாய் ஆட்சி செய்யும் வீடுகள். மகரம் செவ்வாயின் உச்ச வீடாகவும், கடகம் செவ்வாயின் நீச்ச வீடாகவும் இருக்கிறது. இயற்கையிலேயே பாவ கிரகமான செவ்வாய் உப ஜெய ஸ்தானமான 3,6,10,11ல் அமையப்பெற்றிருந்தால் நற்பலன்களை வழங்குவார்.
செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் 10ஆம் வீட்டில் அமர்ந்து தெசை நடைபெற்றால் மிக உயர்ந்த பதவிகளை வழங்குவார்.
செவ்வாய் சாதகமாக அமையப் பெற்று அதன் தசா புத்தி நடைபெற்றால் பூமி யோகம், மனை யோகம், உயர் பதவிகளை அடையும், யோகம், அரசாங்கம் மூலம் உயர்வுகள், உடன் பிறந்தவர்களால் அனுகூலங்கள், மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய அமைப்பு உண்டாகும்.
செவ்வாய் ரத்தகாரகன் என்பதால் பெண்கள் ஜாதகத்தில் சாதகமாக அமைவது நல்லது. அப்படியல்லாமல் நீசம் பெற்றோ, பாவிகள் சேர்க்கை பெற்றோ அமைந்துவிட்டால் செவ்வாயின் தசா புத்தி காலங்களில் வயிற்றுக் கோளாறு, ரத்தம் தொடர்பான பாதிப்புகள், மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப் பையில் பிரச்னைகள், வயிற்றில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய சூழலை உருவாக்கிவிடுவார்.
செவ்வாய் கிரகத்துக்குரிய மிருகசிரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசை முதல் தெசையாக வரும்.
ஜாதகத்தில் பலம் பெற்று குழந்தைப் பருவத்தில செவ்வாய் திசை நடைபெற்றால் நல்ல பலமும், நோய்கள் எளிதில் அண்டாத உடலமைப்பு ஏற்படும். எப்போதும் அக்குழந்தைகள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.
செவ்வாய் திசை மேசம்,கடகம்,சிம்மம்,தனுசு,மீன லக்கினத்தார்க்கு முழு சுபர்!!
விருச்சிக லக்கினத்திற்கு அரை சுபர்.