தக தகவென தீபாவளி உடையில் ஜொலிக்கும் தமன்னா.

தமன்னா தனது தீபாவளி உடையில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழ் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். தற்போது ரஜினிக்கு ஜோடியாக ஜெயிலர்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கியுள்ள இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின் போது தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதில் தமன்னா ஜொலிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.