104 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்கா – வங்காள தேசம் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோசோவ் மற்றும் டிகாக்கின் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்காள தேசம் அணி களமிறங்கியது.
நோர்க்கியா மற்றும் ஷம்சியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேசம் அணி 101 ரன்னில் சுருண்டது. அதிகப்பட்சமாக தாஸ் 34 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் சகீப் அல் ஹசன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோர்க்கியா 4 விக்கெட்டும் ஷம்சி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.