ஆஸி. அணியின் விக்கெட் கீப்பர் யார்?
உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியா நாளை இங்கிலாந்து அணியை சூப்பர் 12 சுற்றில் எதிர்கொள்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனான மேத்யூ வேடுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால், அவர் நாளைய போட்டியில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஏனெனில், டி20 உலகக் கோப்பை தொடரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீரரும் விளையாடலாம் எனச் சொல்லி ஐசிசி விதிகளை தளர்த்தியுள்ளது. இருந்தாலும் அதற்கு சம்பந்தப்பட்ட அணியின் மருத்துவர் அனுமதி அவசியம் என சொல்லப்பட்டுள்ளது. அதனால், அவர் நாளை விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் அடங்கிய ஆஸ்திரேலிய அணியில் வேட் மட்டுமே ஒரே ஒரு விக்கெட் கீப்பர். மாற்று விக்கெட் கீப்பர் அந்த அணியில் இல்லை. அதனால் டேவிட் வார்னர் அல்லது ஸ்டார்க் போன்ற வீரர்கள் விக்கெட்கீப்பிங் பணியை கவனிப்பார்கள் என சொல்லப்பட்டது. அதனை அந்த அணியின் கேப்டன் ஃபின்ச் தெரிவித்திருந்தார்.
ஆனால், அண்மைய தகவலின் படி கீப்பிங் பணியை மேக்ஸ்வெல் கவனிப்பார் என தெரிகிறது. அதற்கு தயாராகும் வகையில் அவர் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல். ஆஸ்திரேலிய அணியில் கடந்த சில நாட்களில் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்படும் இரண்டாவது வீரர் ஆகியுள்ளார் வேட். இதற்கு முன்னர் சுழற்பந்து வீச்சாளர் சாம்பா, தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்.