பருத்தித்துறையில் பட்டப்பகலில் 33 பவுண் நகைகள் திருட்டு!

யாழ்., பருத்தித்துறையில் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பவுண் நகைகளைத் திருடிச் சென்றுள்ளர்கள்.
இந்தத் தகவலை பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடகங்களிடம் இன்று தெரிவித்தார்.
வீட்டில் இருந்தவர்கள் நேற்றுக் காலையில் வேலை நிமிர்த்தம் வெளியே சென்ற வேளை, வீட்டினுள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த 33 பவுண் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்கள்.
வீட்டார் மாலை வீடு திரும்பிய போதே பவுண் நகைகள் திருடப்பட்மை தெரியவந்துள்ளது.
அதையடுத்து சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.