இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்குச் சிவப்பு பிடியாணை.

வெளிநாடுகளில் இருந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு எதிராகச் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன தெரிவித்தார்.
அவர்களில் சிலர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கம்பஹா மாவட்டக் குழுக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டபோதே பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன இதனைத் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நெருக்கமாகச் செயற்படுகின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.