கம்பஹாவில் நாடாளுமன்ற பஸ் மோதி பொலிஸ் சார்ஜன்ட் மரணம்!
நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான பஸ் மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கம்பஹா – யக்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்றுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஜா – எல பகுதியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வை முடித்துக் கொண்டு அதில் பங்கேற்றவர்களை வீடுகளுக்கு அழைத்துச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி பொல்கஹாவெல பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ள பொலிஸார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.