பறந்தார் பஸில்; சிதறியது ‘மொட்டு’ – கம்மன்பில போட்டுத் தாக்கு.

“அரசியல் செய்ய முடியாததால் பஸில் ராஜபக்ச தனது தாய்நாடு நோக்கிப் பறந்துவிட்டார். இதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சிதறு தேங்காய் உடைப்பதுபோல சிதறியுள்ளது.”
இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சிதறியுள்ளதால், அதிருப்தி நிலையில் உள்ளவர்கள் எம்முடன் இணைவார்கள். ஏனெனில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காக்க நாம் எதையும் செய்வோம் என்பது அவர்களுக்குத் தெரியும்.
மக்கள் ஆணையைக் காக்கவே நாம் அமைச்சுப் பதவிகளை இழந்தோம். மாறாக சலுகைகளுக்காக அரசியல் நடத்துவது கிடையாது” – என்றார்.