யாழில் போதைப்பொருள் பாவனை உச்சம்! – இரண்டே மாதங்களில் 508 பேர் கைது.
உயிர்கொல்லி போதைப்பாவனையுடன் தொடர்புடைய 508 பேர் கடந்த இரண்டு மாதங்களில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை முழுவதும் உயிர்கொல்லி போதைப்பொருள் மிகப் பெரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. ஆனால் வடபகுதியில் அது மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது. எதிர்கால சமூகத்தைப் பாதிக்கும் இந்த விடயம் தொடர்பில் அனைவரும் பொறுப்புடன் செயற்படவேண்டும்.
வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை மிக அதிக அளவில் காணப்படுகின்றது. கடந்த ஒரு சில மாதங்களாக இது அதிகரித்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் உயிர்கொல்லி போதைப்பொருள்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஏனைய இடங்களோடு ஒப்பிடும்போது அதிகளவாக காணப்படுகின்றது. குறிப்பாக யாழ். மாவட்டம் மிகவும் ஒரு பாதிப்பான நிலையில் காணப்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும்” – என்றார்.